பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

peoplenews lka

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஈரான் ஜனாதிபதி இப்ரா ஹிம் ரைசி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெ ரீப்பை சந்தித்து பேசினார்.

இந்தப் பயணத்தின் போது, பாகிஸ்தானும் ஈரானும் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. மேலும் இரு தரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தவும் ஒப்புக்கொண்டன.

இந்த நிலையில் ஈரானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும் போது, ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொள்ளும் எவருக்கும் பொருளாதாரத் தடைகள் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்றார்.

மேலும் பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு விநியோகம் செய்த சீன மற்றும் பெலாரசை சேர்ந்த நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது குறித்து அவர் கூறும்போது, பேரழிவு ஆயுதங்களை அதிகமாக்கி மற்றும் அவற்றை வழங்குவதற்கான வழிமுறைகள் என்பதால் இந்த தடைகள் விதிக்கப்பட்டன.

இந்த நிறுவனங்கள் சீனா மற்றும் பெலாரசை அடிப்படையாகக் கொண்டவை. பெலாரசில் உள்ள நிறுவனங்கள் பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்திற்கு உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்கியதை நாங்கள் கண்டோம்.

பேரழிவு ஆயுதங்கள் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பாக, அவை எங்கு நடந்தாலும், நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Share on

உலகம்

peoplenews lka

ஜனாதிபதியாக பதவியேற்ற விளாடிமிர் புதின்...

ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புதின் ஐந்தாவது முறையாக பதவியேற்றுள்ளார்.  இவரது பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.. Read More

peoplenews lka

பேச்சுவார்த்தையை நிராகரித்தது இஸ்ரேல்...

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்... Read More

peoplenews lka

“தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்”...

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு தனது பொருளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறது... Read More

peoplenews lka

தாய்வானின் நில அதிர்வு...

தாய்வானின் ஹுவாலியன் (Hualien) பகுதியில் நில அதிர்வு பதிவாகியுள்ளது... Read More